சூரியகுமாரன் சிந்து ராஜன்
மைதல தேசம் என்றொரு தேசம். அங்கு கண்டக நகரம் என்றொரு பட்டணம் உண்டு. அப்பட்டணத்தில் சக்கரபாணி என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் எத்தனையோ நியம நிஷ்டைகளோடு இருந்தும், தான தர்மங்களைச் செய்தும் அவருக்கு பிள்ளை மட்டும் பிறக்கவில்லை. எத்தனையோ யாகங்கள் செய்த பின்னர் அவர் மனைவி வக்கிரை கருவுற்றாள். ஆனால் அவனுக்கு பிறந்த புத்திரர்கள் பிறந்த மாத்திரத்திலேயே பிணமாயினர்.
அரசனுக்கு மனம் வெறுத்து விட்டது. பூர்வ ஜன்மத்தில் தான் செய்த ஏதோ தீய செயலே இப்பிறவியில் இவ்வாறு பழிவாங்குகிறது என்று எண்ணினான். எல்லாவற்றையும் துறந்து காட்டுக்குப் போய் தவம் செய்து அடுத்த பிறவியிலாவது நற்கதி அடைய வேண்டும் என தீர்மானித்தார்.
அந்தச் சமயத்தில் அவர் அரண்மனைக்கு சவுனக முனிவர் வந்தார். அரசன் முனிவரை வரவேற்று அர்க்கியம் (கைகழுவ நீர் அளித்தல்)முதலிய கொடுத்து உபசரித்தார். அரசன் படும் வேதனையை அறிந்த முனிவர் அரசே! இனி கவலைப்பட வேண்டாம். உனக்கு சத்புத்திரன் பிறப்பான். சூரிய விரதம் அனுஷ்டித்தால் உன் மனோரதம் பூர்த்தியாகும் என்று சொல்லி அதை அனுஷ்டிக்கும் விதத்தை அவருக்கு தெரிவித்தார்.
அவ்வாறே அரசன் மிகுந்த பக்தியோடு சூரிய விரதம்த்தை அனுஷ்டிக்க தொடங்கினார். 29-ஆம் நாள் சூரிய பகவான் அரசன் மலடன் என்பதை அறிந்து அவனுருவில் வக்கிரையின் கனவில் அவளோடு கூடி சென்றார். காலையில் வக்கிரை கணவரிடம் சுவாமி, விரதம் அனுஷ்டிப்பவர்கள் காம வசத்தில் ஈடுபடுதல் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். நேற்று இரவு தாங்கள் நடந்துகொண்ட விதம் நியாயமா. என்று கேட்டாள் வக்கிரை கணவரிடம்.
பிரியே என்ன சொல்கிறாய்! எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, என்றார் அரசன்.
இரவு தன்னோடு அவர் கூடியதை வக்கிரை தெரிவிக்க அரசன் "பிரியே! பகவானே நமக்கு புத்திர பாக்கியம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவ்வாறு அனுகிரகித்தருக்க வேண்டும் என நினைக்கிறேன். எல்லாம் அவன் செயல்" என்றார்.
பத்து மாதம் சென்றதும் வக்கிரை ஆண் மகனை பெற்றாள். அக் குழந்தை பிறக்கும்போது மூன்று கண்களும் சிவந்த சடையும் கொண்டு இரு கைகளிலும் சூலம் ஏந்தி பிறந்தது. அதைக் கண்ட வக்கிரை பயந்து மூச்சடைத்து விட்டாள். வருணன் ஒரு பிராமணன் வடிவம் கொண்டு அங்கு வந்து அக்குழந்தைக்கு சிந்து என பெயரிட்டு ஆசீர்வதித்துவிட்டு சென்றார்.
சிந்து வளர்ந்து வரும் போதே பராக்கிரமம் மிகுந்தவர் ஆனார். ஒரு கணம் அவர் சும்மா இருப்பதில்லை. எட்டு திசைகளிலும் திரிந்து கண்டோரை எல்லாம் கலக்குக் கலக்கி வந்தார். மலைகளையெல்லாம் அனாவசியமாக பெயர்து எறிந்தார். சமுத்திரங்களை கலக்கினார். வானிலே பாய்ந்து சந்திரனை தடுத்து நிறுத்தினார். இப்டியாக அவர் செய்யாத அட்டகாசம் இல்லை.
இதை கவனித்த வந்த அசுர குருவான சுக்ராச்சாரியார் இவனே அசுரர்களுக்கு ஏற்ற தலைவன் என்று எண்ணி அவரிடம் வந்தார்.
"சிந்து! நீ சிவபெருமானை தியானித்து தவம் செய்து அவரிடமிருந்து ஏராளமான வரங்களை பெற்றாயானால், உன்னை ஒருவராலும் வெல்ல முடியாது. அப்போது தேவர்களை அடக்கி, அசுர குலம் மேலோங்க செய்ய முடியும்" என்றார்.
அசுர குருவின் வார்த்தைகளைச் சிரமேற் கொண்டு உடனே அவர் தவம் செய்யச் சென்றார் . 2000 வருடம் அவர் தவம் செய்யவே சிவனும் சிந்து முன்பு தோன்றி வேண்டிய வரம் கேட்குமாறு சொன்னார். சகல புவனங்களும் தனக்கு அடிபணிய, தேவர்களால் தனக்கு அழிவுவின்றி நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும், அவர் வேண்டவே, சிவனும் அவ்வாறே வரமருளினார்.
சிவபெருமானிடம் வரம் பெற்றுத் திரும்பி வந்த சிந்து,பூவுலகம் முழுமையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அவரை எதிர்த்த அசுரர்கள் தோல்வியுற்று அவரை தங்கள் அரசனாக ஏற்றனர். பின்னர் சிந்து தேவலோகம் சென்றார்.
சிந்து வருவதை அறிந்த இந்திரன் வஜ்ராயுதத்தை எடுத்து கொண்டு ஐராவதத்தின் மீது ஏறி, தேவர்களோடு ஓடி வந்தார். தேவர்களால் அவர் முன்பு எதிர்த்து நிற்க்க முடியவில்லை. இந்திரன் ஓங்கி அடித்த வஜ்ராயுதத்தை சிந்து அனயாசமாகத் தடுத்து அப்பால் விலக்கி விட்டு தனது கை முஷ்டியினால் ஓங்கி ஐராவதத்தின் தலையில் குத்தினார். அதனால் அது பொறி கலங்கியது போல் ஆகி நின்றது. அதற்குமேல் இந்திரன் அவரை எதிர்த்க சக்தி அற்றவனாய் மாயையால் மறைந்து விஷ்ணுவிடம் சென்று சரணடைந்தார். தேவலோகம் சிந்துவின் வசமாகியது அங்கே தனது வீரர்களில் சிலரை நிறுத்திவிட்டு சிந்து பூலோகம் திரும்பினார்.
தேவேந்திரன் மகாவிஷ்ணுவிடம் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை கூறி உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சினான். மகாகாவிஷ்ணு சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டர. தேவ உலகத்தில் சிந்துவால விட்டுச் செல்லப்பட்ட வீரர்களை வளைத்து நாசம் செய்தனர் தேவர்கள்.
தூதுவர்கள் மூலம் அதை அறிந்த சிந்து மிகுந்த சீற்றம் கொண்டு படையுடன் தேவலோகம் சென்றார். விஷ்ணுவின் தலைமையில் தேவர்கள் எதிர்த்தனர். இரு தரப்பிலும் உக்கரமான போர் நடந்தது. சிந்துவின் உக்கரமான கோபத்தின் முன்பு, இந்திரன் முதலான தேவர்கள் தலைகாட்ட முடியாது சிதறினர். தண்டாயுதத்தால் அவர்களை ஓட ஓட விரட்டிய தோடு, மகாவிஷ்ணு ஏறி இருந்த கருடனின் ஒரு பக்கத்து இறகையும் அறுத்து தள்ளினார்சிந்து.
சிவபெருமானின் அளவற்ற வரங்களை பெற்றுள்ள அவரை வெல்வது என்பது இயலாத காரியம் என உணர்ந்தார் மகாவிஷ்ணு. இந்த சந்தர்ப்பத்தில்தான் தந்திரமாகத்தான் காரியத்தை சாதிக்க வேண்டும் என்று விரும்பினர்.
"ஏய் சிந்து ராஜானே! உன் பராக்கிரமத்தை யாம் அறிவோம். உனக்கு இணையாகத் தேவர்களில் எவரையும் சொல்ல முடியாது. உனக்கு வேண்டிய வரங்களைக் தருகிறோம்!" என்றார் மகாவிஷ்ணு.
தன்னை எதிர்க்க முடியாமல் தான் இவ்விதம் தந்திரமாக மகாவிஷ்ணு பேசுகிறார் என்பதை உணர்ந்து சிந்து, தந்திரமாக மகாவிஷ்ணு ஏமாற்ற நினைத்தார் சிந்து அசுரன்.
"எனக்கு வரம் தருவதாக சொன்னதால் உம்மை கேட்கிறேன். தேவர்கள் அனைவரோடும் நீர் என் நகரத்துக்கு வந்து, நாமும் இடும் பணிகளை செய்து வரவேண்டும்."
தமது வார்த்தைகளாலேயே சிக்கிக்கொண்ட விட்ட மகாவிஷ்ணு வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தார். அந்த கணமே சிந்து தன் ஆட்களை கொண்டு அவர்களை பிடித்து வந்து நகரத்திலே சிறையிலிட்டார்.
இவ்வாறாக விஷ்ணு முதலான தேவர்கள் சிந்து அசுர ராஜனால் சிறையில் அடைக்கப்பட்டு துன்பத்துக்கு ஆளாகி வரும்போது, ஒருநாள் தங்களது குருவான பிரகஸ்பதியை பார்த்து சுவாமி, நாங்கள் இவ்வாறு எத்தனை காலம்தான் அவதிப்படுவது? எங்களுக்கு விமோசனமே கிடையாதா? சிந்து அசுர ராஜனுக்கு அழிவு யாரால் தான் ஏற்படும்? என்று கேட்டனர் தேவர்கள்.
"தேவர்களே! சிந்து அசுர ராஜன் இரண்டாயிரம் வருடங்கள் தவம் செய்து ஏராளமான வரங்கள் பெற்றவர். அவரை வெல்ல சிவபெருமானாலேயே முடியாது. சரவேஸ்வரான முழுமுதற்கவுள் விநாயகபெருமானாக அவதரித்து. அவர் ஒருவர்தான் சிந்து அசுர ராஐனை சம்ஹரிக்க வல்லவர். அவரை பிராத்திப்பதுதான் நமக்கு உள்ள ஒரு வழி!" என்றார் பிரகஸ்பதி.
சிறையில் இருந்தவாறே தேவர்கள் விநாயகரைபெருமானை மனதால் தியானித்து வந்தனர். இதன் நடுவே சதுர்த்தி விரதம் வரவே அதையும் மானசீகமாக அவர்கள் அனுஷ்டித்தனர். அதனால் சந்தோஷம் அடைந்த விநாயகர் சித்திபுத்தி சமேதராய் அவர்கள் முன்பு தோன்றி விரைவிலேயே சிந்து அசுர ராஐனை சம்ஹரித்து உங்களை சிறையிலிருந்து விடுவிப்போம் என்று அபயம் அளித்து மறைந்தார்.
இது இவ்வாறிருக்க திரிசந்தி ஷேத்திரத்தில் கௌதமர் முதலிய முனிவர்கள் தங்கள் உருவங்களை யோகத்தினால் மறைத்துக் கொண்டு சிவபெருமானை நோக்கி தவமிருந்து வந்தனர். அவர்கள் தவத்துக்கு மெச்சிய சிவபெருமானும் பார்வதியும் சமேதராய் அவர்கள் முன் தோன்றினார்.
"கைலாசபதே! சிந்து அசுர ராஜன் செய்யும் கொடுமை தாங்க மாட்டாது சகல புவனங்களும் துன்பப்படுகின்றன. தேவர்கள் அவரது சிறையில் கிடந்து வாடுகின்றனர். முனிவர்களைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை. நாங்கள் ஒரு சிலர் அவர் கையில் சிக்காமல் மாய உருக் கொண்டு தங்களை குறித்து தவம் செய்து வருகின்றோம். அவருக்கு அழிவு ஏற்பட்டால்தான் உலகம் பிழைக்கும். இல்லையேல் தர்மம் நசிந்து விடும். அளவற்ற வரங்களைப் பெற்று அவர் தன்னை வெல்பவர் யாருமில்லை என்ற மமதையில் செய்ய தகாத காரியங்களை செய்து வருகிறார். தேவரீர் தயவு கூர்ந்து எங்களுடனேயே தங்கி இருக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் இங்கும் இருக்க முடியும்" என்று முனிவர்கள் பிரார்த்தித்தனர்.
மகேச்வரனும் அவர்கள் கோரிக்கைக்கு இணங்கி அங்கு தங்க சம்மதித்தார். சிவகணங்கள் அந்த க்ஷேத்திரத்திலேயே கைலயங்கரிக்கு ஒப்பாக ஆலயம் ஒன்றை நிர்மாணித்தார்கள். அங்கே தேவி எழுந்தருள மகேஸ்வரன் நிஷ்டையில் அமர்ந்தார். சகல புவனங்களையும் சம்ஹரிக்கின்றவராயும் தேவர்களால் வணங்கப்படுகிவராயும் இருக்கின்ற அவர் யாரைக் குறித்து நிஷ்டையில் இருக்கிறார் என்பதை அறிய விரும்பினாள் தேவி. ஒரு நாள் நாதனிடம் அதைப்பற்றி கேட்டாள்.
"தேவி, விஷ்ணு முதலான தேவர்களால் நாம் எவ்வாறு நான் தியானிக்கப்படுகிறேனோ, அவ்வாறு நான் தியானிக்கப்படும் பரம்பொருள் ஒன்று உண்டு. அவரே மும்மூர்த்திகளாகிய எங்களை தோற்றுவித்தவர். சிந்து ராஜனால் சிறையில் அடைக்கப்பட்டு அல்லல்படும் தேவர்கள் துயர்துடைக்க அப்பெருமான் உன்னிடம் திருக்குமாரனாக அவதரிக்கப் போகிறார். 12 வருடகாலம் ஏகாக்ஷ மந்திரத்தை தியானித்து வந்தாயானால் அந்த பாக்கியம் நிறைவேறும்" என்றார்.
பார்வதியும் அவ்வாறே மயூரேச விநாயகர் ஆலயத்தில் 12 வருடகாலம் ஏகாக்ஷமந்திரத்தை தியானித்துவர முடிவில் மும்மூர்த்திகளின் திருமுகங்களோடும் ஆறு கரங்களுடன் ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார்.
"தேவி எம்மை மனத்தால் வழிபட்டு வரும் தேவர்களைச் சிறையிலிருந்து வெளிவர செய்யவும், சிந்து அசுர ராஐனை சம்ஹரிக்கவும் உம்முடைய குமாரனாக விரைவில் வந்து அவதருப்போம்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
விநாயகர் சதுர்த்தி அன்று தேவி, பெருமானை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பக்தியோடு பூஜை செய்து வந்தார். அப்போது கோடி சூரியப் பிரகாசமான ஜோதி ஒன்று கிளம்பியது. ஏராளமான கண்களும், முகங்களும், கைகளும், கால்களும், கொண்டு விஸ்வரூபமாக நின்றார். அதை காண முடியாதவளாய் தன் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு "சுவாமி! இந்த காட்சியை பார்க்கும் சக்தி எனக்கில்லை. தயவுசெய்து குழந்தை பருவத்தில் தரிசனம் தரவேண்டும்" என்று கூறினார்.
அவ்வாறே விஸ்வரூபத்தை விடுத்து அழகிய பாலகன் உருவம் கொண்டார். மூன்று கண்களும் ஆறு கரங்களும் மார்பிலே முத்துமாலை அசைய காட்சிதந்த குழந்தையை பார்வதி அள்ளி அணைத்து முலைபாலூட்டினார். சிந்துராஐனால் சிறையில் அடைபட்டிருந்த தேவர்கள் வலது தோள்களும் வலது கண்களும் துடிக்க மகிழ்சியால் ஆரவாரம் செய்தனர்.
அதே சமயம் சிந்து ராஐனுக்கு இடது தோளும் இடது கண்களும் துடித்தன. அவன் உள்ளத்தில் இதுவரை இல்லாத ஒரு குழப்பம் எழுந்தது.