நைமிசாரண்ய வனம் என்பது அரிய தவத்தை மேற்கொண்டு, ஞான மார்க்கத்தில் வாழ்ந்துவரும் மாமுனிவர்களின் சொர்க்க பூமி!
கிருஹஸ்தாசிரம தர்மத்தை நெறியோடு கடைப்பிடித்து வானப்ரஸ்தாசிரமத்தை முறையோடு மேற்கொண்டு வேள்விகள் நடத்திவரும் பற்றற்ற பரம ஞானியர்களின் ஒப்பற்ற அழகுமிகு ஆனந்த ஆசிரமம்! நைமிசாரண்யம!.
இப்பேற்பட்ட சிறப்பு மிக்க நைமிசாரண்ய திருத்தலத்தை தோற்றுவித்தவர் கந்தன்.
அன்று துறவறம் ஏற்ற சுத்த சிவயோகியர் பலர் தங்கள் தவத்திற்குத் தகுந்த திருத்தலம் எது என்று அறியவேண்டி கந்த பெருமானை தரிசித்து மார்க்கம் கேட்டனர்.
நான்முகன் தருப்பையால் ஒரு சக்கர உருளையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய சக்கரத்தை உருட்டி விட்டு, அந்த சக்கரம் உருண்டோடி சென்று நிற்கின்ற இடம்தான் தவத்திற்கு உகந்தது என்று அருளினார்.
No comments:
Post a Comment