ஒரு சமயம் நாரத முனிவர் நைமிசாரண்ணியதுக்குத் சென்றார். அங்குள்ள முனிவர்கள் அளவற்ற சந்தோஷத்துடன் அவரை வரேவற்று உபசாரங்கள் செய்தனர். முனிவர்களுடைய உபசாரங்களால் மனம் மகிழ்ந்து நாரதர் அவர்களிடம் உரையாடும்போது சிவலிங்கத்தின் மகிமையைப் பலவரலாறு எடுத்துக் கூறினார். அந்தச் சமயம் சூத முனிவர் அங்கே வந்தார். அவரைக் கண்டதும் கண்டதும் எல்லையற்ற குதூகலம் கொண்டவர்களாய் அவரை வரவேற்று நமஸ்கரித்தனர்.
முனி சிரேஷ்டரே தங்கள் வருகையால் நாங்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்களானோம். சிவலிங்கத்தின் மகிமைகளைத் தாங்கள் எடுத்துக் கூறி எங்களையும் ஈசன் அனுக்கிரத்துக்குப் பாத்திரர்களாகக் வேண்டும் என்று கோரினார்.
சூத முனிவருடைய நெஞ்சம் ஆனந்தத்தால் நிறைந்தது. எண்ணற்ற சிவலிங்கங்களையும் வியாச பகவானையும் மனத்தால் தியானித்து அருள்பாலிக்க வேண்டினார். பின்னர் அவர்களை பார்த்து சொன்னார்.
No comments:
Post a Comment