Monday, June 8, 2020

ஸ்ரீ விநாயகர் புராணம்





✅[45+] God Vinayagar (pillaiyar, Ganpati) Latest HD Photos ...
Add caption

   புராணம் பிறந்த கதை




முன்னொரு காலத்திலே சௌனக முனிவர் நைமிசாரணியம் எனப்படும் வனத்தில் பெரி யாகம் ஒன்று செய்தார்.  பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து செ்யப்பட்ட அந்த யாக்திற்கு, நாலா பக்கங்களிலிருந்தும் முனி சிரேஷ்டர்கள் வந்து கூடினார்.  இதுவரை யாருமே செய்து அறியாத யாகத்தைச்  சௌனகர் செய்யப்போகிறார் என்பதைக் கேட்டதும் தாங்களும் கலந்து கொண்டு பேரின்பப் பயனை அடைய வேண்டுமென்று முனிவர்கள் தத்தம் சிஷ்யர்களோடு அவர் ஆச்சிரமத்துக்கு வந்து சேர்ந்தனர்.  மேலும் அந்த வனத்தி்ல் செய்யப்படும் எந்த யாகமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நான்முகனால் தவக்காரியங்களுக்காக முனிவர்களுக்குக் காட்டப்படும் இடமாகும் அது.

  ஒரு சமயம் முனிவர்கள் எல்லோரும் ஒன்று கூடி பிரம்மதேவரிடம் சென்று வேதஸ்வரூபியே இத்தனை காலமாக நாங்கள் கிருகஸ்தாச்சிரமத்தை கடைபிடித்து வந்தோம். இனி நாங்கள் பந்த பாசங்களை விடுத்துப் பகவத் தியானத்தில் ஈடு பட்டு பிறவாய்பேற்றை அடைய விரும்புகிறோம். எவ்வித இடையூறுமின்றி எங்கள் நோக்கம் நிறைவேற  நாங்கள் நிம்மதியாக தவம் செய்ய தகுந்த இடம் ஒன்றை காட்டி அருளவேண்டும் என்று வேண்டினார்கள்.
நான்முகனும் அவர்களுடைய  கோரிக்கையை மகிழ்வுடன்  ஏற்று தர்ப்பையை எடுத்து அதனை சிறு வட்டமாக்கி தரையிலே உருட்டிவிட்டார்.

" முனி சிரேட்டர்களே, இதோ உருண்டு செல்லும் இந்தத் தர்ப்பையைத் தொடர்ந்து செல்லுங்கள். எவ்விடத்தில் மேலே செல்லாது இந்தத் வட்டதர்ப்பை உருளாமல் நின்று விடுகிறதோ. அந்த இடமே உங்கள் தவத்திற்குச் சிறந்த இடமாகும்" என்றார்.


அவ்விதம் பிரம்ம தேவனால் உருட்டி விடப்பட்ட தர்ப்பையாலான சக்கரம் உருண்டு வந்த நின்ற இடம்தான் நைமிசாரண்யம். இத்தனை பெருமைவாய்ந்த இடத்தில் செய்யபடும் யாகம் எவ்வளவு சிறந்ததென எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஆகவே பூவுலகில் பலபாகங்களிருந்தும் முனிவர்கள் யாகத்தை காண்பதற்காக அங்கு வந்து கூடினர்.

அந்த யாகத்துக்கு சூத முனிவரும் தம் சிஷ்யர்களுடன் வந்து சேர்ந்தார்.  அவர் பதினெட்டு புராணங்களையும் குறைவறக் கற்றவர்.  அவரை கண்டதும் அனைவரும் எதிர்கொண்டு அழைத்து வந்து பலவிதங்களிலும் உபசரித்தனர். பின்னர் எலோருமாக  அவரைபார்த்து சுவாமி!  தாங்கள் இவ்வேள்விக்கு எழுந்தருளியிருப்பது எங்கள் பாக்கியமே. பதினெட்டு புராணங்களின் மகத்துவங்களை தங்கள் மூலமாக கேட்டு நாங்கள் ஏற்கனவே கிருதாத்தர்களாகியுள்ளோம். எனினும் பன்னீராண்டுகள் தொடர்ந்து நடைபெறப்போகும் இவ்வேள்வியின் போது தாங்களும் உடனிருந்து நடத்தி வைப்பதோடு, மேலும் மேலும் பகவத் விஷயங்களைக் எடுத்து கூறி எங்களுக்கு  முக்தியை பெற வழிகாட்டவேண்டும்! எனக்கேட்டார்கள். கூடியிருந்த முனிவர்கள் ஒருமுகமாகப் பகவத் விஷயங்களை கூறவேண்டுமென்று பிராத்திக்கவே, சூத முனிவருக்கு மகிழ்ச்சி எல்லையில்லாது பொங்கியது.


"அன்பர்களே! உங்கள் கோரிக்கை என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. பகவானின் திவ்ய லீலா வினோதங்கள் எத்தனை எத்தனையோ! அவற்றை எடுத்துச் சொல்ல இந்த யுகம் போதாது. பாகவத உபன்யாசத்தில் ஈடுபட்டிருக்கும் எனக்கு மேலும் மேலும் அந்த பாக்கியங் கிட்ட வழி செய்கிறீர்கள். உங்கள் ஆவலை இப்போதே பூர்த்தி செய்கிறேன்" என்று சொல்லத் தொடங்கினார்.

"ஆதியில் கைலாசபதி ஆகிய சிவபெருமான் நந்திதேவருக்கு சொல்ல, நந்திதேவர் சனத்குமாருக்கு உபதேசிக்க, அவரிடமிருந்து வியாசர் கேட்டு பதினெட்டு புராணங்களையும் உலகிலேயே பரப்பினார். அதேபோல மற்றும் சில முனிவர்கள், வேறு வேறு பரம்பரை வழியாக உபதேசம் பெற்று, அம்மகா புராணங்களுக்கு உப புராணங்கள் 18 இயற்றினார்கள்.  சனத்குமார புராணம், நரசிங்க புராணம், நந்தி புராணம்,  சிவதரும புராணம், துர்வாச புராணம், நாரதீய புராணம், கபில புராணம், ஔசன புராணம், ஸௌமிய புராணம், வருண புராணம், காளி புராணம், வாசிஸ்டலிங்க புராணம், மானவ புராணம், சௌர புராணம், பராசரிய புராணம், மரீச புராணம், சாம்பேச புராணம், பார்கவ புராணம் ஆகிய பதினெட்டு புராணங்களை அவை. இவற்றில் முக்கியமாக விளங்குவது பார்க்கவ புராணம் விநாயகப் பெருமானை பற்றியது. வியாஸரிடமிருந்து பிருகு முனிவர் உபதேசம் பெற்று செய்யப்பட்டதால், அவர் பெயரைக் கொண்டே பார்க்கவ புராணம் என்று சொல்லப்படுகிறது. எக்காரியத்தைத் தொடங்கினும் விக்கினங்கள் ஏதுமின்றி  சுமூகமாக முடிய விநாயகரைத் தொழுது ஆரம்பிக்க வேண்டுமென சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய மேன்மை வாய்ந்த கணேசர் திவ்விய சரிதங்களை கேட்டு அனைவரும் சாயுஜ்யம் அடைவீர்களாக!"

இவ்வாறு சொல்லிவிட்டு சூதர், கணபதியின் லீலா வினோதங்களை எடுத்துக்கூற தொடங்கினார்.

No comments:

Post a Comment

சூரியகுமாரன் சிந்து ராஜன்

சூரியகுமாரன் சிந்து ராஜன் மைதல தேசம் என்றொரு தேசம். அங்கு கண்டக நகரம் என்றொரு பட்டணம் உண்டு. அப்பட்டணத்தில் சக்கரபாணி என்னும் அரசன் ஆண்ட...