Monday, June 8, 2020

ஸ்ரீ விஷ்ணு புராணம் அத்தியாயம் 1

  Lord Vishnu Wallpapers, Hindu Art, Indian Paintings, Hanuman, Lord Krishna, Sacred Art, Cute Photos, Princess Zelda, Superhero
Add caption

ஒரு நாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்திரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கி கூறலானார்.


எனது குரு நாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாத்திரங்களையும்  தங்களிடம் இருந்தல்லவா கற்றறிந்தேன்!  சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும், தங்களுடைய அனுகிரகத்தினால் சகல சாஸ்திரங்களிலும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள்.  தர்மங்கள் அனைத்தையும் அறிந்தவரே!  உலகம் உண்டான விதத்தையும், இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன். தேவரீர் அனுக்கிரகம் செய்ய வேண்டும்!  இதுவும் தவிர, இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது?  எங்கிருந்து எப்படி உருவானது எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? பஞ்சபூதங்களின் நிலை என்ன,எதனால் அவை விளங்கும்? இந்த விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள், இவற்றின் தோற்றத்தையும், பூமியிருக்கும் விதத்தையும் சூரியன்,சந்திரன் கோள்கள் ஆகியவறின் நிலைையும், அளவுகளையும் தேவர்களின் வமிசங்களையும்,  மனுக்களையும்,  மனுவந்தாரங்களையும், மகாகல்பங்ளையும், நான்கு யுகங்களால் விகற்பிக்கப் பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும்,  அவற்றின் முடிவு நிலைகளையும், சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அடியேன் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.



ஓ முனிவரில் உயர்ந்தவரே!  தேவர்கள், அரசர்கள்,  முனிவர்கள் முதலாவர்களின் வரலாறுகளையும் வியாச முனிவர் வகுத்தருளிய வேத சாகைப் பிரிவுகளையும்,  பிராமணன் முதலிய வர்ணங்களின் குல தர்மங்களையும், பிரமச்சாரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தர்மங்களையும் தங்களிடம் கேட்க விரும்புகிறேன். வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! ஒரு நாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்திரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கி கூறலானார்.

எனது குரு நாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாத்திரங்களையும் வேதங்களையும் தரும சாஸ்திரங்களையும் தங்களிடம் இருந்தல்லவா கற்றறிந்தேன்! சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் அடியேனைத் தங்களுடைய அனைவரும்  அடியேனைத் தங்களுடைய அனுகிரகத்தினால் சகல சாஸ்திரங்களிலும் நலல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தர்மங்கள் அனைத்தையும் அறிந்தவரே! உலகம் உண்டான விதத்தையும், இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன்.  தேவரீர் அனுக்கிரகம் செய்ய வேண்டும்! இதுவும் தவிர, இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது எங்கிருந்து எப்படி உருவானது எப்படி எங்கே லயப்பட்டது இனி எங்கே லயமாகும் பஞ்சபூதங்களின் நிலை என்ன எதனால் அவை விளங்கும் இந்த விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய  உற்பத்தியையும், மலைகள், கடல்கள், இவற்றின் தோற்றத்தையும்,பூமியிருக்கும் விதத்தையும் சூரியன்,சந்திரன் கோள்கள் ஆகியவறின் நிலைையும், அளவுகளையும் தேவர்களின் வமிசங்களையும் மனுக்களையும் மனுவந்தாரங்களையும், மகாகல்பங்ளையும் நான்கு யுகங்களால் விகற்பிக்கப் பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும், சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அடியேன் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
 ஓ முனிவரில் உயர்ந்தவரே!  தேவர்கள் அரசர்கள் முனிவர்கள் முதலாவர்களின் வரலாறுகளையும் வியாச முனிவர் வகுத்தருளிய வேத சாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வர்ணங்களின் குல தர்மங்களையும், பிரமச்சாரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தர்மங்களையும் தங்களிடம் கேட்க விரும்புகிறேன். வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இந்த விசயங்கள் யாவற்றையும் அடியேனுக்கு அருளிச் செய்யத் தாங்கள் திருவுள்ளம் கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்திரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார்.

அதற்குப் பராசர முனிவர் அவரை நோக்கி கூறலானார்.

தரமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்திரேயரே உலக உற்பத்தி  முதலியவற்றை அறிந்துள்ள என்பாட்டனாரான ஸ்ரீ வசிஷ்ட பகவான் எனக்கு அருளிச் செய்த விஷயங்களை நினைவூட்டினீர். அதாவது முன்பு ஒரு சமயம் விசுவாமித்திரால் ஏவப்பட்ட அரக்கன் ஒருவன் என் தகப்பனாரை பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன். உடனே மிகவும் கோவம் அடைந்து, அரக்கர்களை அழியச்செய்யும் படியான  யாகம் ஒன்றை செய்யத் துவங்கினேன். அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள்.

அதைக் கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர்   "பிள்ளாய்!  உன் கோபத்தை விட்டு விடு.  அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது. இப்படியான கோபம் மூடருக்குதான் தோன்றுமே ஒழிய ஞானியருக்கு கோபம் வராது.  குழந்தாய்!  யாரால் யார் கொல்லப்படுகிறான். ஒருவனால் மற்றொருவன் கொல்லப் படுவதில்லை. அவனவன் தான் செய்த பாவபுண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும் அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்கம் மோட்சம் இரண்டையும் கெடுப்பதற்குக் காரணமாகிய கோபத்தை முனிவர்கள் அனைவரும் விட்டு விடுகிறார்கள். ஆகையால் குழந்தாய்!  நீ அந்த கோபத்திற்கு வயப்பட்டு விடாதே! எந்தவிதமான அபராதமும் செய்தறியாத பேதையான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்து போனது போதும்!  இனி இந்த யாகத்தை நிறுத்தி விடு.

பெரியோருக்கு பொறுமையாக இருப்பதே சிறந்த ஆச்சாரமாகும்!" என்றார். நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து, என் யாகத்தை நிறுத்தி விட்டேன். அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சி அடைந்தார்.

அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும் அர்க்கியம் கொடுத்து உபசரித்தார். மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையானாரான,அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி பிள்ளாய்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துகூட குரு வாக்கிய பரிபாலனத்திற்காக, பொறுமை அடைந்தாய். ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறிய கடவாய். கோபத்தால் நமது சந்ததியாரை அறியாமல் செய்த உன் பொறுமையின் பெருமை பாராட்டி, உனக்கு நாங்கள் வேறொரு வரம்தருகிறோம். அதாவது  நீ புராண சம்ஹிதையை செய்யும் சக்தி உடையவராக கடவாய்! தேவதைின் உண்மை இயல்புகளை அதாவது இதுதான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக. பிரவிருத்தி, நிவர்த்தி என்ற இரு வகை கர்மங்களிலும் உனது புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும் சந்தேகமற்றும் விளக்குவது ஆகுக! என்று அருள் செய்தார். அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர், என்னைப்பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை உனக்கு சித்தி ஆகட்டும் என்றார்.

இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வாசிஷ்டராலும் கூறப்பட்டவை எல்லாம் இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என் நினைவிற்கு வந்தன. மைத்ரேயரே! பெரியோரின் அருள் பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான், யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன். நன்றாகக் கேளும்!

புராணக் கருத்தின் படி பார்த்தால் உலகமானது ஸ்ரீவிஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு, அவரிடதிலேதான் இருக்கிறது. தொடர்புக்கு முடிவுக்கும் அவரேதான் கர்த்தாவாகும். இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன. அவரேதான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்.

No comments:

Post a Comment

சூரியகுமாரன் சிந்து ராஜன்

சூரியகுமாரன் சிந்து ராஜன் மைதல தேசம் என்றொரு தேசம். அங்கு கண்டக நகரம் என்றொரு பட்டணம் உண்டு. அப்பட்டணத்தில் சக்கரபாணி என்னும் அரசன் ஆண்ட...