Saturday, July 25, 2020

ஸ்ரீ விஷ்ணு புராணம் அத்தியாயம் 2

2. பிரபஞ்ச உற்பத்தி

மைத்ரேயருக்கு பராசர முனிவர் புராணம் சொல்ல துவங்கி அதன் முக்கிய விஷயமான ஸ்ரீ விஷ்ணுவ பலவகையாக துதிக்கலானார்.

விகாரம் அற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய திவ்விய மங்கள விக்கிரகம் உடையவனாய்,சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும்படியான ஜயசாலியான ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கு என் வனக்கம் உரித்தாக! படைக்கும்போது ஹிரண்ய கர்பரூபியாகவும் காக்கும்போது ஹரிரூபியாகவும், சங்கரிக்கிறபோது சங்கரரூபியாகவும் இருந்து வழிபடுவோருக்கு விடுதலை அளிப்பவருமான ஸ்ரீவாசுதேவருக்கு என் வணக்கம் உரித்தாகுக! ஒன்றாயும் பலமான சொரூபம் உள்ளவராய் காரணா வஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும் காரியாவஸ்த்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி அனாதியான பிரகிருதி வாசனையாலே, கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீ விஷ்ணுவிற்கு என் வணக்கம் உரியதாகுக!  படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய், நிமேஷொன் மேஷ சூரிய கமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது சரீரமாக உடையவராயும், அந்த காலத்துக்கு உட்படாத மேன்மையான சொரூபம் உடையவராயும் சர்வ வியாபகர் ஆனவருக்கு என் வணக்கம் உரியதாகுக!  பிரபஞ்சங்களுக்கு எல்லாம் ஆதாரமாய். ஆதி சூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய், எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய் பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றம் அடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்கு உரியவராய், கல்யாணம் குணங்களால் புருஷோத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானை சேவித்தேன். தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனை சொல்கிறேன்.

பரமாத்மாவாக விசாரிக்கும் இடத்தில் சுத்த ஞான சொரூபமாய், அஞ்ஞானம், துக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய், அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பு, அதனால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு தேவ மனுஷ்யாதி ரூபமாக தோன்றுபவராய், சேதனங்களில் எல்லாம் வியாபித்து ஜகங்களை கிரகித்து, தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ங்காரங்களை செய்து கொண்டு தன் திருவுளத்தால் அல்லது கர்ம வசத்தினாலோ பிறப்பு இறப்பு இல்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை தக்ஷப் பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள். பிறகு அவர்கள், உலகத்துக்கெல்லாம் படைப்பு கர்த்தராயும் எம் பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும் யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடத்தில் கேட்க அவர் அருளியதை சொல்கிறேன்.

No comments:

Post a Comment

சூரியகுமாரன் சிந்து ராஜன்

சூரியகுமாரன் சிந்து ராஜன் மைதல தேசம் என்றொரு தேசம். அங்கு கண்டக நகரம் என்றொரு பட்டணம் உண்டு. அப்பட்டணத்தில் சக்கரபாணி என்னும் அரசன் ஆண்ட...