மனிதப்பிறவி மகத்தானது
பக்தர்களின் பாவங்களையெல்லாம் நிவர்திசெய்து மோட்சத்திற்கு வழிகாட்டும் பகவான், நாராயணனின் திருவடிகளைச் சேவித்த கருடன், வைகுண்ட வாசனே! முத்தொழில்புரிந்து மூவுலகாள்வோனே, எல்லையற்ற பரம்பொருளே! எனக்கு ஏற்பட்டிருக்கும், சில ஐயங்களைத் தாங்கள்தான் நீக்கியருள வேண்டும்
உயிரினங்கள் பிறக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மரணத்துக்குப்பின் சிலருக்கு சொர்கம் வாய்கிறது. சிலர்மட்டும் நரகத்துக்கு செல்ல நேரிடுகிறது. அதற்கு என்ன காரணம்? மோட்சமாகிய விஷ்ணுலோகத்தை அடைய விரும்புகிறவர்களுக்கு தாங்கள்கூறும் வழியாது? பாவங்களை நீங்கிக்கொள்ள எத்தகைய செயல்களைக் கடைபப்பிடிக்க வேண்டும்? மனிதர்கள் நற்கதி அடையும்மார்கம் எது தாங்கள் அனைத்தையும் எனக்குத் தெளிவாய் கூறியருளவேண்டும் என்று வேண்டினார்
No comments:
Post a Comment