குமாரருக்கு அருளிய கணநாதன்
சிதம்பரத்திற்கு தென்மேற்கே திருநாரையூர் என்னும் சிவதலம் ஒன்றிருக்கிறது. அவ்வூரிலே உள்ள பொல்லாப் பிள்ளையாருக்கு பூஜை செய்யும் பொறுப்பை அந்த ஆதி சைவகுடும்பம் ஏற்றிருந்தது.
குடும்பத் தலைவர் ஒரு நாள் அவசர காரிய நிமித்தம் வெளியூர் செல்ல நேர்ந்தது. திரும்பி வருவதற்குள் பகற் பொழுது பூஜை காலம் தவறிவிடும். ஆகவே அவர் புறப்பட்டுச் செல்லும்போது தம் குமாரன் நம்பியை அழைத்தார்.
நம்பி நான் திரும்பி வருவதற்கு நேரம் ஆகலாம், ஆதனால் இன்று பிள்ளையாருக்கு நீதான் பூஜை செய்ய வேண்டும். பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, திலகமிட்டு மலர்களை சார்த்தி நைவேத்தியம் செய்துவிடு. சாயங்காலம் பூஜைக்கு நான் வந்து விடுவேன், என்று சொல்லிவிட்டு சென்றார் நம்பியின் தகப்பனார்.
No comments:
Post a Comment